கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி. மில் தொழிலாளர்கள் நூதன போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி. மில் தொழிலாளர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:15 AM IST (Updated: 22 Aug 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை,

கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 7 என்.டி.சி. மில்கள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மில்களில் 4 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2–வது நாளான நேற்று கோவை ஸ்டேன்ஸ் மில் பஞ்சாலை நுழைவு வாயில் முன்பு தொழிலாளர்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசு நியமித்த குழு நிர்ணயம் செய்தபடி நாளொன்றுக்கு குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.600–ஐ என்.டி.சி. பஞ்சாலைகளில் பணியாற்றும் அனைத்து கூலித்தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story