ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது
கேரள மாநிலத்தில் பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்கள் வீடுகளை இழந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
திருச்சி,
கேரள மாநிலத்தில் பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்கள் வீடுகளை இழந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் லாரி மூலம் ஸ்ரீரங்கத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பு செயலாளர் நடராஜன், மார்த்தாண்டன், சேகர், கஸ்தூரி சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story