அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்


அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:12 AM IST (Updated: 22 Aug 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் தேனியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தேனி,


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேனி நேரு சிலை சிக்னல் அருகில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு துறைகள் இல்லை என்ற நிலையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள பணியாளர் சீரமைப்பு குழுவை கலைத்து, அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்.

கருவூலத்துறையை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஞான.திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பொருளாளர் சென்னமராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேரு சிலை சிக்னல் பகுதியில் இருந்து தேனி வாரச்சந்தை நுழைவு வாயில் வரை சாலையோரம் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நிலவழகன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சாந்தியம்மாள், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story