உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடக்குமா?
குடகில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
மைசூரு,
இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள் மைசூருவுக்கு வரவழைக்கப்படும். இந்த யானைகளின் முதல் கஜபயணம், நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருந்தது.
இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பரிதவித்து வருகிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் நிவாரண முகாம்களில் அகதிகள் போல தஞ்சமடைந்துள்ளனர். அந்த மக்கள் தங்களுக்கு நிரந்தரமாக வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடகு மாவட்டம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பவும், நிவாரண முகாம்களில் தவித்து வரும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் மற்றும் நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.
இதன்காரணமாக இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை கொண்டாடுவதா? வேண்டாமா? என்ற நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டு உள்ளது. குடகில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பல கோடி ரூபாய் செலவிட வேண்டி உள்ளதால், மைசூரு தசரா விழாவை சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நாளை நடக்க இருந்த யானைகளின் கஜபயணமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறுகையில், மைசூரு தசரா விழாவை நடத்துவது தொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் உத்தரவுக்காக மாவட்ட நிர்வாகம் காத்துக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை கஜபயணம் வேண்டாம் என்று அறிவித்தாலும், முதல்கட்டமாக 6 யானைகளும் எளிமையாக மைசூருவுக்கு அழைத்து வரப்படும். தற்போது அரசு குடகு மாவட்டத்தை பழைய நிலைக்கு திரும்புவது குறித்து கவனம் செலுத்தி இருப்பதால், மைசூரு தசரா விழா குறித்து பேசும் நிலையில் இல்லை என்றார்.
நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருந்த யானைகளின் கஜபயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும், மைசூரு தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 19-ந்தேதி விஜயதசமி அன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள் மைசூருவுக்கு வரவழைக்கப்படும். இந்த யானைகளின் முதல் கஜபயணம், நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருந்தது.
இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பரிதவித்து வருகிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் நிவாரண முகாம்களில் அகதிகள் போல தஞ்சமடைந்துள்ளனர். அந்த மக்கள் தங்களுக்கு நிரந்தரமாக வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடகு மாவட்டம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பவும், நிவாரண முகாம்களில் தவித்து வரும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் மற்றும் நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.
இதன்காரணமாக இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை கொண்டாடுவதா? வேண்டாமா? என்ற நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டு உள்ளது. குடகில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பல கோடி ரூபாய் செலவிட வேண்டி உள்ளதால், மைசூரு தசரா விழாவை சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நாளை நடக்க இருந்த யானைகளின் கஜபயணமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறுகையில், மைசூரு தசரா விழாவை நடத்துவது தொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் உத்தரவுக்காக மாவட்ட நிர்வாகம் காத்துக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை கஜபயணம் வேண்டாம் என்று அறிவித்தாலும், முதல்கட்டமாக 6 யானைகளும் எளிமையாக மைசூருவுக்கு அழைத்து வரப்படும். தற்போது அரசு குடகு மாவட்டத்தை பழைய நிலைக்கு திரும்புவது குறித்து கவனம் செலுத்தி இருப்பதால், மைசூரு தசரா விழா குறித்து பேசும் நிலையில் இல்லை என்றார்.
Related Tags :
Next Story