இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
மும்பை,
மந்திரி சபை கூட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும்(ஓ.பி.சி.) வெளிநாட்டு கல்வி உதவித்தொகை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் ஓ.பி.சி. மாணவர்களும் பயன் பெறுவார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 20 மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள முதன்மையான 200 பல்கலைக்கழகங்களில் படிக்க நிதி உதவி அளிக்கப்படும். இதில் 30 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்துவிட்டு, இயற்கை முறை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதற்கட்டமாக இயற்கை வேளாண் முறையை புல்தானா, அகோலா, வாசிம், அமராவதி, யவத்மால் மற்றும் வார்தா பகுதிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story