எலக்ட்ரிக் கிரைண்டர்


எலக்ட்ரிக் கிரைண்டர்
x
தினத்தந்தி 22 Aug 2018 10:55 AM IST (Updated: 22 Aug 2018 10:55 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

உணவுகளில் கலப்படம் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் மிகவும் அக்கறை செலுத்துகிறார்கள். தங்களுக்கு தேவையான மாவு மற்றும் பிற பொருட்களை அரைத்துக்கொள்ள பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் இந்த தேவையை நிறைவேற்றுவதற்காகவே வந்துள்ளது தான், ‘வொண்டர்மில் எலக்ட்ரிக் கிரைண்டர்’.

அரிசி, கோதுமை, சோயா, ராகி, நிலக்கடலை, சத்துமாவு போன்ற பொருட்களை வீட்டிலேயே அரைத்து கொள்ள இந்த அரவை இயந்திரம் உதவுகிறது. நமது தேவைக்கேற்ப குருணையாகவோ நைசாகவோ அரைத்து கொள்ளலாம்.

மிக்ஸியின் அளவே கொண்ட இந்தக்கருவியில் 1250 வாட் திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சத்தமில்லாமல் அதே நேரம் விரைவாகவும் பணி செய்கிறது. ஒரு மணி நேரத்தில் 45 கிலோ மாவை இதில் அரைக்க முடியும்.

கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மாவு வகைகளில் ‘குளூட்டன்’ எனப்படும் பசைப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் ஒரு பொருளாகும். மேலும் மாவு அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு சில ரசாயனக்கலவைகளும் சேர்க்கப்படுகின்றன. நாமே வீட்டில் அரைக்கும் மாவில் இவ்விரண்டு பொருளும் இல்லாமல் அவ்வப்போது பிரெஷ்ஷாக அரைத்து கொள்ளலாம்.

தானியங்களில் உள்ள வைட்டமின்கள் அழிந்து விடாமல் இருப்பதற்கு அது பிரெஷ் ஆக இருப்பது அவசியம். ஒவ்வொரு முறையும் தானியங்களை டப்பாவில் அடைத்து மில்லுக்கு தூக்கி செல்ல வேண்டிய வேலையும் மிச்சம். பண்டிகை காலங்களில் பலகாரம் செய்ய மாவு அரைக்க இந்த வொண்டர் மில் பேருதவியாக இருக்கும்.

உலகிலேயே தரமான மோட்டார்களை தயாரிக்கும் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதன் மோட்டாரை தயாரித்து உள்ளது. 450 கிலோ கோதுமையை தொடர்ந்து பத்து மணி நேரம் அரைத்து மோட்டாரின் தரத்தை நிரூபித்து காட்டியுள்ளனர் வொண்டர் மில் நிறுவனத்தினர். இந்த சோதனை முயற்சிக்கு வேறு நிறுவன மோட்டார்கள் பயன்படுத்தினால், அவை புகைந்து கருகிவிடும் என தங்கள் தயாரிப்பை பெருமையாக குறிப்பிடுகிறார்கள்.

லைப் டைம் வாரண்டியுடன் தற்போது அமெரிக்காவில் விற்பனையாகி வரும் வொண்டர் மில் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை 12 ஆயிரம் ரூபாய்.

Next Story