எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ‘விவோ எக்ஸ் 21’ போன்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் விவோ. இந்த நிறுவனம் புதிதாக விவோ எக்ஸ் 21 மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப்பார்த்து ‘ஐ அம் இம்ப்ரெஸ்ட்’ என்று சொல்லாமல் யாரும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அதன் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன.
விவோவின் ஒவ்வொரு புதிய மாடல் போன் அறிமுகத்தின் போதும் மக்களிடையே எதிர்பார்ப்பு காணப்படும். அதில் இம்மியளவும் ஏமாற்றம் இல்லாமல் வெளிவந்துள்ளது தான் விவோ எக்ஸ் 21.
6.28 அங்குலம் அளவில் டிஸ்பிளே அமைந்துள்ளது. இதனால் கேம் விளையாடும் போதும், வீடியோ பார்க்கும் போதும் பிரம்மாண்டமான தோற்றத்தை கண்களுக்கு விருந்தாக்குகிறது.
போனை ‘அன்லாக்’ செய்ய நம் முகத்தை ‘ஐ.டி’யாக பயன்படுத் தலாம். அல்லது கை ரேகையை கொண்டும் ‘அன்லாக்’ செய்யலாம். இதனால் நம் அனுமதியின்றி யாரும் நமது போனை உபயோகிக்கவோ, தகவல்களை பார்க்கவோ இயலாது.
இந்த போனில் ‘இன்ப்ரா ரெட் சென்சார்கள்’ உள்ளன. இதனால் இருட்டில் கூட நம் முகத்தை அடையாளம் தெரிந்து கொண்டு போனை ‘அன்லாக்’ செய்யும் வசதி இதில் உள்ளது.
போட்டோவை எடுத்த பின்பு அதை போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி அதை அழகாக்கும் வேலை எல்லாம் இனி தேவையில்லை. இந்த போனில் உள்ள 24 மில்லியன் போட்டோகிராபிக் யூனிட்டுகள் மிகமிக துல்லியமாக சிறந்த தரத்துடன் குறைந்த வெளிச்சத்திலும் நம்மை அழகாக காட்டும். இளசுகளின் போட்டோ மோகத்திற்கு தீனி போடக்கூடிய வகையில் 12 MP கேமராக்கள் இதில் முன்னும் பின்னும் உள்ளன. இதில் இருக்கும் ‘பேஸ் பியூட்டி’ செட்டிங் மூலம் போட்டோ எடுத்தால் நமது முக அமைப்புக்கு ஏற்றவாறு அதுவே மேம்படுத்தி கொடுத்து விடும் ஆற்றல் கொண்டது.
இடையூறு இல்லாமல் கேம் விளையாடக்கூடிய ‘கேம் மோட்’ வசதியும் இதன் பிளஸ் பாயிண்ட் ஆகும். கேம் விளையாடும் போது இடையே போன் வந்தால், நீங்கள் பேசிவிட்டு கேமை விட்ட இடத்தில் இருந்து தொடரலாம். அதுபோல கேம் மோடில் போன் இருக்கும் போது தவறுதலாக எதையும் அழுத்திவிட்டாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
ஸ்னாப்ட்ராகன் 660 AJE பிராசஸர், 6 GB ரேம், 3200 mAh பேட்டரி ஆகியன விவோ எக்ஸ் 21 மொபைல் போனின் சிறப்புகள். இதன் ‘டூயல் சார்ஜிங் என்ஜின்’ நாள் முழுவதும் சார்ஜ் இறங்காமல் வைத்திருக்கும். இதன் ‘ஹை பை ஆடியோ சிப்’ மிக அருமையான சவுண்ட் குவாலிட்டி கொண்டது.
அப்புறமென்ன ஒரே செல்பி தான், கேம் தான், பாட்டு தான். அடடடடடடா...
Related Tags :
Next Story