பிரபலமானவர்களின் வாகனம் : எம்.ஜி.ஆருக்கு பிடித்த கார்கள்!


பிரபலமானவர்களின் வாகனம் : எம்.ஜி.ஆருக்கு பிடித்த கார்கள்!
x
தினத்தந்தி 22 Aug 2018 3:31 PM IST (Updated: 22 Aug 2018 3:31 PM IST)
t-max-icont-min-icon

திரைத்துறையின் மூலம் அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்தவர். இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

திரைத்துறையில் ஹீரோவாக வலம் வந்த நாட்களில் இவர் பயன்படுத்தியது கப்பல் போன்ற நீளமான டாட்ஜ் கிங்ஸ்வே கார். இதன் பதிவு எண் எம்.எஸ்.எக்ஸ். 3157.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் பயன்படுத்தியது நீல நிற அம்பாசிடர் கார் ஆகும். இதன் பதிவு எண் டி.எம்.எக்ஸ். 4777.

இந்த கார் இப்போது சென்னை தியாகராய நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் உள்ளது. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தில் கம்பீரமாக இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story