கோவில்பட்டி அருகே கடலையூரில் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்தூவி மரியாதை
கோவில்பட்டி அருகே கடலையூரில் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே கடலையூரில் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தியாகிகள் நினைவு ஸ்தூபி
கோவில்பட்டி அருகே கடலையூரில் கடந்த 1942–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் நடந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சங்கரலிங்க முதலியார் வீரமரணம் அடைந்தார். மாடசாமி முதலியார், ராமசாமி முதலியார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆங்கிலேயர்களால் நெசவு தறிகள் சூறையாடப்பட்டன.
இந்த போராட்டத்தில் பங்குபெற்ற 34 தியாகிகளை நினைவுகூறும் வகையில், கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்பு கடந்த 2008–ம் ஆண்டு பொதுமக்களால் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது.
மலர்தூவி மரியாதை
வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினம், கடலையூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியின் முன்பு சங்கரலிங்க முதலியார் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. தியாகிகள் நினைவு ஸ்தூபி மற்றும் சங்கரலிங்க முதலியாரின் உருவப்படத்துக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபியில் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசப்பற்று, தேசப்பக்தி, தேச ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ரோட்டரி சங்க தலைவர் பாபு, முன்னாள் தலைவர் வீராசாமி, துணை செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் பால்ராஜ், முத்து முருகன், தலைமை ஆசிரியர் விவேகானந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story