சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
செஞ்சி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
செஞ்சி,
செஞ்சி அருகே சோகுப்பம் கிராமத்தை சேர்ந்த பீமாராவ் என்பவருக்கும் காட்டுசித்தாமூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இருவீட்டார் ஏற்பாட்டின்பேரில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற உள்ளதாக செஞ்சி சைல்டுலைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாசில்தார் ரங்கநாதன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ, சமூகநல அலுவலர் பிரபாவதி, சரசு, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, 18 வயது பூர்த்தியாகாமல் மகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்தனர்.
அப்போது சிறுமியின் பெற்றோர் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து நாளை சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.