செல்போனில் சத்தமாக பேசியதை கண்டித்ததால் ஆத்திரம்: முதியவரை கீழே தள்ளி கொலை செய்த வாலிபர் கைது


செல்போனில் சத்தமாக பேசியதை கண்டித்ததால் ஆத்திரம்: முதியவரை கீழே தள்ளி கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2018 3:45 AM IST (Updated: 23 Aug 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் சத்தமாக பேசியதை கண்டித்ததால் ஆத்திரத்தில் முதியவரை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மணல்மேடு,

நாகை மாவட்டம், மணல்மேடு அருகே கிழாய் கிராமம் பாரதி நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மணிமாறன் (28). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அப்பகுதி பஸ் நிறுத்தத்தில் குமாரசாமி படுத்து இருந்தார். அங்கு நின்று கொண்டு இருந்த மணிமாறன் செல்போனில் சத்தமாக பேசினார். இதனால் அவரை குமாரசாமி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன், அவரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு சென்ற மணிமாறன், குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.

இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது குமாரசாமி மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமாரசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story