சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த வேண்டும், காட்மா சங்க கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் நடைபெற உள்ள 2-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த வேண்டும் என்று காட்மா சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க (காட்மா) பொதுக்குழு கூட்டம் கோவை கணபதியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது செயலாளர் சி.சிவக்குமார், துணை பொதுசெயலாளர் ஜி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:-
மத்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் குறுந்தொழில் கூடங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக 30 சதவீத ஜாப் ஆர்டர்கள் (வர்த்தக ஒப்பந்தம்) குறைந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. என்ஜினீயரிங் சம்பந்தமான உதிரிபாகங்களை ஜாப் ஆர்டர்களாக பெற்று இயங்கிவரும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.20 லட்சத்துக்கு கீழ் ஜாப் ஆர்டர்களை பெற்று இயங்கும் குறுந்தொழில் கூடங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளபடி ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ஜாப் ஒர்க் அல்லது உற்பத்தியில் ஈடுபடுகின்ற குறுந்தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி. வரி தாமதமாக செலுத்தும் போது அபராதம் விதிக்காமல் 90 நாட்கள் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வருகின்ற நெருக்கடிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் மத்திய நிதி துறை இணை அமைச்சர் தலைமையில் பீகார், பஞ்சாப், கேரளா, டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் அடங்கிய துணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் தமிழக நிதி அமைச்சரையும் இணைக்க வேண்டும்.
பருவமழையால் நீர் நிலைகளில் நிரம்பி வரும் நிலையில் அனைத்து நீர்மின் உற்பத்தி நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மின் உற்பத்தியை தொடர வேண்டும். சென்னையில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 2-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story