கோட்டூர் பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் நீர் வரத்தை கலெக்டர் ஆய்வு
கோட்டூர் பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால் களில் நீர் வரத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதிகளில் ஆறு, வாய்க்கால்களில் நீர் வரத்தினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டூர் அருகே தட்டாங்கோவில் கிராமத்தில் முள்ளியாறு தலைப்பு பகுதியில் உள்ள மதகு, அரிசந்திராநதி ஆற்றின் தலைப்பு பகுதியில் உள்ள மதகு ஆகியவற்றில் நீர்வரத்தை பார்வையிட்டு தினமும் தண்ணீர் அளவீடு மற்றும் நீர் பங்கீட்டு முறை குறித்தும் வெண்ணாறு வடிநில கோட்ட செயற் பொறியாளரிடம், அவர் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து இருள்நீக்கி கிராமத்திற்குட்பட்ட அரிசந்திராநதி ஆற்றின் மதகு, சேந்தமங்கலம் கிராமத்தில் அரிசந்திராநதி ஆறு, சின்னகுருவாடி காரியக்கூத்தான் பாசன வாய்க்கால், விக்கிரபாண்டியம் கிராமத்திற்குட்பட்ட ஆலாத்தூர் பாசன வாய்க்கால், நந்திமாங்குடி கிராமத்திற்குட்பட்ட நந்திமாங்குடி பாசன வாய்க்கால், ஆலிவலம் பாசன வாய்க்கால், பூசலாங்குடி பாசன வாய்க்கால் ஆகியவற்றில் நீர்வரத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பாசன வாய்க்கால்களில் பிரித்து வழங்கப்படும் நீரின் அளவு, வாய்க்கால்களில் குறைவாக செல்லும் நீரின் அளவை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து செயற்பொறியாளரிடம், அவர் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் அப்பகுதி விவசாயிகளிடம் நீர்வரத்து முழுமையாக உள்வாய்க்கால் களில் சென்றடைகிறதா? என்பதை கலெக்டர் நிர்மல்ராஜ் கேட்டறிந்து, தமிழக அரசால் வழங்கப்படும் வேளாண்மை சார்ந்த திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி சம்பா சாகுபடி செய்து அதிக லாபம் பெற வேண்டும் என கூறினார்.
ஆய்வின்போது வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story