மினிவேன் கவிழ்ந்து விபத்து : மணமகன் உள்பட 10 பேர் படுகாயம்


மினிவேன் கவிழ்ந்து விபத்து : மணமகன் உள்பட 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Aug 2018 3:15 AM IST (Updated: 23 Aug 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

மினிவேன் கவிழ்ந்ததில் அகதிகள் முகாமை சேர்ந்த மணமகன் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். நிச்சயதார்த்தத்துக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்.

கலசபாக்கம், 

திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). இவருக்கும் ஆரணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக சுரேஷ் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் மினிவேனில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கலசபாக்கம் குருவிமலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த மணமகனான சுரேஷ், தாமோதரன் (64), ரஞ்சினி (48), நேசகுமார் (18), கலைச்செல்வன் (38), விஜயசூரியன் (53), தர்ஷினி (27), கவீஷ் (7), ராகுல் (13), நவநீத ராஜ் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story