பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் அடைப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வேளாண்மை துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றனர். மேற்கண்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள், அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் செல்வதற்கு கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் வழியே தான் பிரதான பாதையாக பயன்படுத்தி வருவார்கள். இதனால் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் எப்போதும் திறந்தே கிடக்கும். இரவு நேரங்களில் அடைக்கப்படுவது வழக்கம். அரசு விடுமுறை நாட்களிலும் கூட கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் திறந்திருக்கும். ஆனால் நேற்று நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டிருந்தன. நுழைவு வாயில் அருகே நடந்து செல்வதற்கு வசதியாக வழியின் கதவுகள் மட்டுமே திறந்திருந்தன. பிரதான நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானத்திற்கு விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை பார்வையிட கார், மோட்டார் சைக்கிள்களில் வரும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் திரும்பி மாற்று வழியில் தங்களது அலுவலகங்களுக்கு சிரமத்துடன் சென்றனர். எப்போதும் பகல் நேரங்களில் திறந்திருக்கும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story