மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் அடைப்பு + "||" + The doors of the entrance hall of Perambalur Collector's office are blocked

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் அடைப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் அடைப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வேளாண்மை துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றனர். மேற்கண்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள், அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் செல்வதற்கு கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் வழியே தான் பிரதான பாதையாக பயன்படுத்தி வருவார்கள். இதனால் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் எப்போதும் திறந்தே கிடக்கும். இரவு நேரங்களில் அடைக்கப்படுவது வழக்கம். அரசு விடுமுறை நாட்களிலும் கூட கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் திறந்திருக்கும். ஆனால் நேற்று நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டிருந்தன. நுழைவு வாயில் அருகே நடந்து செல்வதற்கு வசதியாக வழியின் கதவுகள் மட்டுமே திறந்திருந்தன. பிரதான நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானத்திற்கு விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை பார்வையிட கார், மோட்டார் சைக்கிள்களில் வரும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் திரும்பி மாற்று வழியில் தங்களது அலுவலகங்களுக்கு சிரமத்துடன் சென்றனர். எப்போதும் பகல் நேரங்களில் திறந்திருக்கும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. 


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைப்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2. 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகள் அடைப்பு- ஆர்ப்பாட்டம்
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன. மண்ணச்சநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: மருத்துவமனையில் பெண்ணால் மடக்கிப்பிடிக்கப்பட்ட வாலிபர் சிறையில் அடைப்பு
கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த வாலிபர் ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண்ணால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
4. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணத்தையொட்டி நாகையில் கடைகள் அடைப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணத்தையொட்டி நாகையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஊர்வலமாக சென்று புதிய பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
5. கருணாநிதி மறைவையொட்டி 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
கருணாநிதி மறைவையொட்டி திருச்சியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.