தர்மபுரியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி


தர்மபுரியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Aug 2018 4:45 AM IST (Updated: 23 Aug 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி,

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பணமாகவும் பலர் அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சார்பில் கேரள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பொருட்களை கேரளாவிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் கலந்து கொண்டு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்தானம், வேதநாயகம், சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயரங்கன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story