பாளையங்கோட்டை கோவிலில் உண்டியலை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் மர்மநபர் தப்பி ஓட்டம்


பாளையங்கோட்டை கோவிலில் உண்டியலை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் மர்மநபர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2018 1:33 PM IST (Updated: 23 Aug 2018 1:33 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை கோவிலில் உண்டியலை உடைக்க முயன்ற போது, அலாரம் ஒலித்ததால் மர்மநபர் தப்பி ஓடினார். இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை, 

பாளையங்கோட்டை கோவிலில் உண்டியலை உடைக்க முயன்ற போது, அலாரம் ஒலித்ததால் மர்மநபர் தப்பி ஓடினார். இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

கொள்ளை முயற்சி

பாளையங்கோட்டை தெற்கு பஜார் மேலவாசல் சுப்பிரமணியர் கோவில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று பக்தர்கள் வழிபாடு முடித்து விட்டு சென்றனர். காலையில் வந்த பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் உள்ளே சென்று பார்த்தார். கோவில் உண்டியலை உடைக்க முயற்சி செய்ததற்கான அடையாளர்கள் தெரிந்தன. ஆனால் கோவிலில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

கண்காணிப்பு கேமராவில்...

தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். கேமராவில், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவில் கதவை உடைத்து உள்ளே செல்வதும், கடப்பாறையால் கோவில் உண்டியலை உடைக்க முயற்சி செய்வதும் பதிவாகி இருந்தது. மேலும், உண்டியலை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் அந்த மர்ம நபர் தப்பி ஓடுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாட்ஸ்-அப் மூலம் வைரலாக பரவி வருகிறது. வாட்ஸ்-ஆப்பில் பதிவான வீடியோ காட்சிகள் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story