நெல்லையில் பரிதாபம் இரும்பு தடுப்பில் மொபட் மோதி கல்லூரி மாணவர் பலி மற்றொருவர் படுகாயம்
நெல்லையில் இரும்பு தடுப்பில் மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் பலத்த காயம் அடைந்தார்.
நெல்லை,
நெல்லையில் இரும்பு தடுப்பில் மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் பலத்த காயம் அடைந்தார்.
இரும்பு தடுப்பில் மோதியது
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த மாரியப்பன் மகன் முகேஷ் (வயது 19). இதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயராமன் (19). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று இரவு 2 பேரும் மொபட்டில் சிந்துபூந்துறையில் இருந்து சந்திப்பு அண்ணா சிலை பகுதிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டின் பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்பில் மொபட் மோதியது.
மாணவர் பலி
இதில் முகேஷ், ஜெயராமன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு ஒரு ஆட்டோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் முகேஷ் பரிதாபமாக இறந்தார்.
பலத்த காயம் அடைந்த ஜெயராமன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story