சாக்ஸின் விலை ரூ.1600


சாக்ஸின் விலை ரூ.1600
x
தினத்தந்தி 24 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 3:53 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பானில் புதிய வகை சாக்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘கியூர்டெக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாக்ஸை அணிந்துகொண்டால் வியர்வையை உறிஞ்சி, அதற்கு பதிலாக நறுமணத்தை வெளியிடுமாம். மேலும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்தும் காப்பாற்றும்.

காம்பி இன மரப்பட்டைகளில் இருந்து உருவாக்கப்பட்ட வாஷி காகித இழைகளால் இந்த சாக்ஸ் உருவாக்கப்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், துர்நாற்றத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதிலிருக்கும் பாக்டீரியா, துர்நாற்றம், ஈரப்பதத்தை உறிஞ்சி, எப்பொழுதும் தூய்மையான சாக்ஸாக காட்சியளிக்க வைக்கிறது. ‘‘இந்த சாக்ஸை அணிந்துகொண்டால் துர்நாற்றம் வருகிறது என்ற சங்கடமே ஏற்படாது. தன்னம்பிக்கையுடன் சாக்ஸை கழற்றாமல் எங்கும் செல்ல முடியும்’’ என்கிறார்கள் கியூர்டெக்ஸ் நிறுவனத்தினர். கருப்பு, சாம்பல் என 2 வண்ணங்களில் கிடைக்கும் சாக்ஸ்களில் கால் விரல்களை எளிதாக நுழைக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஜோடி கியூர்டெக்ஸ் சாக்ஸ் விலை 1600 ரூபாய்.

Next Story