சிறைக் கைதிகளின் வேண்டுகோள்
இங்கிலாந்தில் உள்ள டேவன் சிறைச்சாலையில் 86 கைதிகள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று, உள்ளூர் செய்தித்தாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
‘‘வியாழன் அன்று வெளிவந்த செய்தித்தாளில் இடம்பெற்ற சுடோகு எண் விளையாட்டு மிகவும் கடினமாக இருந்தது. 86 பேரும் முயன்று பார்த்தோம். ஒருவராலும் சரியாக விடை அளிக்க இயலவில்லை. வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே செய்தித்தாள் எங்களுக்கு அனுமதிக்கப்படுவதால், மறுநாள் வரும் விடையையும் எங்களால் பார்க்க இயலாது. அதனால் எளிதான சுடோகு வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கையெழுத்து இட்டிருந்தனர். செய்தித்தாள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதியவர் 33 வயது மைக்கேல் பிளாட்ச்போர்ட். இவர் புத்திசாலி. கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றியவர். இருப்பினும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் யாரையாவது கடுமையாகத் தாக்கிவிடுவதால், அடிக்கடி தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது வேண்டுகோளுக்கு செவி சாய்த்த செய்தி ஆசிரியர், வியாழக்கிழமைகளில் மட்டும் எளிமையான சுடோகு எண் விளையாட்டை பத்திரிகைகளில் வெளியிடுகிறார்.
Related Tags :
Next Story