திக்கணங்கோடு அருகே போலீஸ் ஏட்டு கார் தீ வைத்து எரிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


திக்கணங்கோடு அருகே போலீஸ் ஏட்டு கார் தீ வைத்து எரிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Aug 2018 3:45 AM IST (Updated: 23 Aug 2018 9:04 PM IST)
t-max-icont-min-icon

திக்கணங்கோடு அருகே போலீஸ் ஏட்டு காரை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கருங்கல்,

திக்கணங்கோடு அருகே மேற்கு மாத்திரவிளையை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் புதிதாக சொகுசு கார் வாங்கியிருந்தார். அந்த காரை இரவு நேரங்களில் வீட்டின் அருகே நிறுத்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் காரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் கார் தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

உடனே வாசுதேவனும் அவரது குடும்பத்தினரும் எழுந்து வெளியே வந்து பார்த்த போது, கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், காரின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. நள்ளிரவில் மர்ம நபர்கள் மண்எண்ணெய் ஊற்றி காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீஸ் ஏட்டு காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? காருக்கு தீ வைத்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story