திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:15 AM IST (Updated: 24 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான், திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வலங்கைமான்,

கடலூர் மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த ரெங்க ராஜன் என்பவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அதன் காரணமாக மன வேதனையில் இறந்து விட்டார். அவருடைய சாவுக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுகுமாறன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் செல்வம், கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். அப்போது கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்த ரெங்கராஜ்் என்பவர் அதிகாரிகளின் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் திட்ட இயக்குனரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story