நாகை அண்ணாமலை கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


நாகை அண்ணாமலை கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 4:00 AM IST (Updated: 24 Aug 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

நாகை அண்ணாமலை கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த அந்தணபேட்டையில் அண்ணாமலை கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் கல்லாறு அருகே கற்பக மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து கற்பக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பட்டு கணபதி, முருகன், மன்மதசாமி, கற்பகமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மறைஞாயநல்லூர் கிராமத்தில் சோமநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தோப்புத்துறை பழைய கடைத்தெரு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Next Story