சேதுபாவாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


சேதுபாவாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 24 Aug 2018 3:45 AM IST (Updated: 24 Aug 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள எரலிவயல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் ஜெயப்பிரகாஷ் (வயது20). இவர் நேற்றுமுன்தினம் மோட்டார்சைக்கிளில் இரண்டாம்புளிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அதேபோல ஆண்டிக்காடு வடக்கு தெருவை சேர்ந்த தவமணி மகன் தனரூபன்(22) என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இரண்டாம்புளிக்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கட்டிடம் எதிரே இருவரின் மோட்டார்சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெயப்பிரகாசை, அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தனரூபன், உடனடியாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story