தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அணைகளின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்யப்படும்
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அணைகளின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் கூறினார்.
திருச்சி,
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 9 மதகுகளில் உடைப்பு ஏற்பட்டது. அணையில் உடைப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்த பகுதிகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் இடிந்து விழுந்ததற்கான காரணம் பற்றி பொதுப்பணித்துறை நீராதார துறை வல்லுனர்கள் கூர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த மதகுகள் இடிந்ததால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. விவசாய பணிகளுக்கும் பாதிப்பு இல்லை. இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. முதல்கட்டமாக அணையின் இடிந்த பகுதிகள் தற்காலிகமாக சீரமைப்பு செய்யப்படும். இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது தொழில் நுட்ப வல்லுனர்களின் முழு ஆய்விற்கு பின்னர் தான் தெரியவரும்.
தமிழகம் முழுவதும் உள்ள இதுபோன்ற பழமையான அணைகளை ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மை பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு முதல்- அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story