மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி
திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் அரசு பஸ் மோதியதில் தம்பதி பலியானார்கள்.
திருவெறும்பூர்,
திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுதா (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் திருச்சியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் உள்ள குண்டூரில் தனியார் அரிசி ஆலை அருகே வந்த போது, திருச்சியில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்தும், சுதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செந்தாமரை கண்ணனை கைது செய்தனர்.

Related Tags :
Next Story