மழை பெய்யாததால் வாங்கிய விதைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்


மழை பெய்யாததால் வாங்கிய விதைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 24 Aug 2018 3:55 AM IST (Updated: 24 Aug 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் பகுதியில் ஆடிப்பட்டத்தில் மழை பெய்யாததால் விதைக்க வாங்கிய விதைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

திருமங்கலம்,

திருமங்கலம் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பிற்காக நிலக்கடலை, பாசிப்பயறு, சோளம், எள் மற்றும் நவதானியங்களை வாங்குவார்கள். ஆடி மாதம் கடைசியில் இந்த விதைகளை விதைப்பதற்கு சரியான பட்டம். ஆனால் ஆடிப்பட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. ஆவணி மாதம் விதைத்தால் சரியாக விளையாது. வாங்கிய விதை பொருட்கள் வைத்து இருந்தால் அது கெட்டுவிடும். இதனால் மறுவிலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுஉள்ளனர். சிலர் சோளம், கம்பு மட்டும் விதைத்துஉள்ளனர். விதைத்த விதைகளும் முளைக்க மழை பெய்யவில்லை.

இதுகுறித்து பச்சகோப்பன்பட்டி விவசாயி செல்லப்பாண்டி கூறியதாவது:- மழை பெய்யவில்லை. இதனால் கடன் வாங்கி கிணற்றில் ஆழ்குழாய் அமைத்து உள்ளேன். அதிலும் போதிய தண்ணீர் இல்லை.

மழையை நம்பியும் விவசாயம் செய்ய முடியவில்லை. கிணற்று நீரையும் நம்ப முடியவில்லை. ஊரில் உள்ள விவசாயிகள் அனைவரும், விவசாயத்தை கைவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story