தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று குரூப்-4 தேர்வில் 35 பேர் தேர்ச்சி
தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 35 பேரை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பாராட்னார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திறமை வாய்ந்த நபர்களை கொண்டு நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமில் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் திருப்பூர் மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்ற 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வில் அவினாசியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சியடைந்துள்ளார். கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலங்களிலேயே திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தான் அதிகமாக 35 பேர் குரூப்-4 தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிநியமன வாய்ப்புகள் கிடைக்க பெற்றுள்ளனர்.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 35 பேருக்கான பாராட்டு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்றுவரும் அனைவரும் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ரமசாமி, கோவை மண்டல இணை இயக்குனர்(வேலைவாய்ப்பு) லதா, துணை இயக்குனர்கள் ஞானசேகரன், ஜோதிமணி, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ராதிகா மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, உதகை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story