திருமணம் செய்வதாக கூறி 35 பெண்களிடம் பண மோசடி செய்த வாலிபர்


திருமணம் செய்வதாக கூறி 35 பெண்களிடம் பண மோசடி செய்த வாலிபர்
x
தினத்தந்தி 24 Aug 2018 5:03 AM IST (Updated: 24 Aug 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக கூறி 35 பெண்களிடம் பண மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சோந்த பெண் ஒருவர் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் இவரை தொடர்பு கொண்ட கல்யாணை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கிருஷ்ணா (வயது31) என்பவர் அப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.

இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் அடிக்கடி பேசி பழகி வந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணா அந்த பெண்ணிடம் வங்கியில் தான் கடன் வாங்கியிருப்பதாகவும், அதை செலுத்த தனக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

இதையடுத்து, அந்த பெண் அவர் கேட்ட பணத்தை கொடுத்து உதவினார். பணத்தை வாங்கிய பின்னர் கிருஷ்ணா திடீரென தலைமறைவாகி விட்டார். அந்த பெண்ணால் அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் சம்பவம் குறித்து பி.கே.சி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாவை தேடி வந்தனர்.

தேடப்பட்டு வந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செயதனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருமணத்துக்கு வரன்தேடும் பெண்களை குறி வைத்து அவர் மும்பை, நவிமும்பை, தானேயை சேர்ந்த 35 பெண்களிடம் இதேபாணியில் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story