பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி


பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 Aug 2018 5:10 AM IST (Updated: 24 Aug 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

புனே பகுதியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு பன்றிக்காய்ச்சலுக்கு ஏற்கனவே 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.

புனே,

பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் காலேவாடி பகுதியை சேர்ந்த 45 வயது நபர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல இன்னொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தார். 

Next Story