சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 24 Aug 2018 9:45 PM GMT (Updated: 24 Aug 2018 7:45 PM GMT)

அரசு பள்ளிகளில் 1 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த முகாம்களில் குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் பெற பரிந்துரை செய்வார்கள். முகாமில் கலந்துகொள்ள குழந்தைகளின் 4 புகைப்படம், மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை நகல் மற்றும் பெற்றோரின் வருவாய் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

இந்த முகாம் வரும் 27-ந்தேதி கொருக்குப்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் அடையாறு சென்னை தொடக்கப்பள்ளியிலும், 28-ந்தேதி ராயபுரம் சென்னை உருது பெண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் நந்தனம் சென்னை தொடக்கப்பள்ளியிலும், 29-ந்தேதி தியாகராயநகர் தொடக்கப்பள்ளி மற்றும் சூளை சென்னை நடுநிலைப்பள்ளியிலும், 30-ந்தேதி பெரம்பூர் சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி சென்னை சமுதாய கல்லூரியிலும், 31-ந்தேதி நுங்கம்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் சேத்துப்பட்டு சென்னை நடுநிலைப்பள்ளியிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story