மக்கள் குறைதீர்க்கும் முகாம்: 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - உதவி கலெக்டர் வழங்கினார்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்: 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:45 AM IST (Updated: 25 Aug 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே போலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் காமராஜ் வழங்கினார்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உதவி கலெக்டர் காமராஜ் தலைமை தாங்கினார். நாகை தாசில்தார் இளங்கோவன், மண்டல துனை தாசில்தார் சக்கரவர்த்தி, சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராமன் வரவேற்றார்.

இந்த முகாமில் பொது மக்களிடம் இருந்து 69 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 31 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து 14 பேருக்கு வீட்டு மனைபட்டா, 14 பேருக்கு முதியோர் உதவிதொகை, 3 பேருக்கு குடும்ப அட்டை என மொத்தம் 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் காமராஜ் வழங்கினார்.

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி, வருவாய் அலுவலர் பத்மா, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், சதீஸ், அன்பரசி, சுபைதா, மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நடராஜன் நன்றி கூறினார்.

Next Story