சமையலர் பணிக்கான நேர்காணலுக்கு மணக்கோலத்தில் மணமகளுடன் வந்த பட்டதாரி வாலிபர்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பள்ளி விடுதிகளுக்கான ஆண் சமையலர் பணிக்கான நேர்காணலுக்கு பட்டதாரி வாலிபர் மணக்கோலத்தில் மணமகளுடன் வந்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களான 11 ஆண் சமையலர் பணிக்கான நேர்காணல் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் நடந்தது.
இதில் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி பாண்டியன் தலைமையில், சென்னை பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் முன்னிலையில் சமையலர் பணிக்கு விண்ணப்பித்திருந்த ஆண்களிடம் முதலில் அதிகாரிகள் கல்வி சான்றிதழ்களை சரிபார்த்து, தனித்தனியாக நேர்காணல் நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது, நேற்று காலையில் திருமணம் முடிந்த பட்டதாரி வாலிபர் மணக்கோலத்துடன் மணமகளுடன் உடனே நேர்காணலுக்கு வந்தார். அங்கிருந்தவர்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அந்த புதுமாப்பிள்ளை ஏற்கனவே ஆண் சமையலர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் திருமணமும், நேர்காணலும் ஒரே நாளில் இருந்ததால் திருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில் மனைவியுடன் நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த புது மாப்பிள்ளை பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர்-ஏவாள்மேரி தம்பதியின் மகனான விக்டர் ஜெயபால் (வயது 31) ஆவார். அவர் பட்டப்படிப்பு மற்றும் கேட்டரிங் படித்து முடித்து விட்டு திருச்சி மாவட்டம் லால்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். அவருக்கும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா நவல்பட்டு அண்ணாநகர் போலீஸ் காலனியை சேர்ந்த பொன்னுசாமி-சகாயமேரி தம்பதியின் மகளான டிப்ளமோ செவிலியர் படிப்பு முடித்த ஷாமிலி(25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை பாளையத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
பிறகு பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் புறப்பட தயாராகினர். அப்போது திடீரென மணமகன் விக்டர்ஜெயபால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்த பள்ளி மாணவர்களுக்கான விடுதியின் சமையலர் பணிக்கு நேர்காணல் நடத்தப்படுவதையும், தான் அதற்கு விண்ணப்பித்திருப்பதையும் நினைத்தவுடன் மணக் கோலத்தில் தனது மனைவியுடன் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மணக்கோலத்தில் தனது மனைவியுடன் வந்திருந்த புது மாப்பிள்ளை விக்டர் ஜெயபாலிடம் அதிகாரிகள் உடனடியாக சான்றிதழ்களை சரிபார்த்து, அவருக்கு நேர்காணலை நடத்தினர். பின்னர் புது மாப்பிள்ளை தனது மனைவியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story