மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The woman who committed the marriage has committed suicide

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரதராமி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த பரதராமி, ரங்கசமுத்திரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நவீன்குமார் (வயது 24). பரதராமியை அடுத்த பெருமாள்பல்லியை சேர்ந்த கேசவலு என்பவரது மகள் சினேகா (21). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவி இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். அங்கு நவீன்குமார் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீன்குமார் மனைவியுடன் ரங்கசமுத்திரத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் சினேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சினேகாவின் தந்தை கேசவலு தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக பரதராமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சினேகாவிற்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சன்னிதானத்திற்கு பாதி தூரம் வரை சென்ற 40 வயது பெண், அய்யப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாமல் திரும்பினார்.
2. சேலம்: பெண் மீது திராவகம் வீச்சு - கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்
சேலத்தில் பெண் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
3. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது
ஜெர்மனியில் பெண் ஒருவர் பிணைக்கைதியாக பிடிபட்டதால், ரெயில் நிலையம் மூடப்பட்டது.
4. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை
பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
5. பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை - மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு
மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.