வேலூர் பழைய பஸ்நிலையம்: வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வேலூர்,
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து பா.ஜ.க.மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் வேலூருக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் வாஜ்பாய் அஸ்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் தசரதன், வி.கே.ஆர்.சீனிவாசன், முன்னாள் மேயர் கார்த்தியாயினி, கலைமகள் இளங்கோ, த.மா.கா. மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், இந்துமுன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் பாகுபாடின்றி அஞ்சலி செலுத்துவது பாராட்டத்தக்கதாக உள்ளது. பிரதமர் மோடி 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார துறை மூலம் மருத்துவ வசதி பெற ஒரு திட்டம் ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நேர்மையான அரசியல் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை. அடுத்த மாதம் 8, 9-ந் தேதிகளில் டெல்லியில் பா.ஜ.க. சார்பில் கட்சியை பலப்படுத்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சிறுமிகளுக்கான பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அஸ்தி ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் செங்கம் வழியாக திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக காவேரிப்பாக்கம் பஸ்நிலையத்தில் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story