குடகில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்


குடகில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:47 AM IST (Updated: 25 Aug 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து, பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்ட மக்களின் வாழ்க்கையை மழை வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மழை குறைந்துள்ளதால், நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடகு வெள்ளம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஹாரங்கி அணையை சரியான நேரத்தில் திறந்து விடாததே இதற்கு காரணம். ஒரே நேரத்தில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அந்த அணையை ஒட்டியுள்ள மக்கந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 32 சிறிய கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. குடியிருப்பு கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள், மறுவாழ்வு வசதிகள் கிடைப்பது குறித்தும் விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

Next Story