வேலை வாங்கி தருவதாக மோசடி மும்பையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது
ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலின் உத்தரவுபடி, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுவந்த மும்பையை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு சமீபத்தில் மின் அஞ்சல் ஒன்று வந்தது.
இதில் சிலர் ரெயில்வேயின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுகளுக்கு மந்திரியின் நேரடி கோட்டா வில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரெயில்வே மந்திரி உத்தரவிட்டார்.
இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். இந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட மும்ைப முல்லுண்டை சேர்ந்த மன்ஜித் சிங் (வயது 38) மற்றும் தானே வசாயை சேர்ந்த ருபுஸ் தாம்ரே ஆகியோரை கைது செய்தனர்.
இதில் மன்ஜித் சிங் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர்கள் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ப்பதாக கூறி பலரிடம் ரூ. 93 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை 30-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Related Tags :
Next Story