அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவ–மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நேற்று பெரம்பலூரில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன் தலைமை தாங்கினார். போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாரதிதாசன் பாடல்களை ஒப்புவித்தனர். இதில் கட்சியின் மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் நூருல்ஹிதா இஸ்மாயில் மற்றும் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.