சாலையை சீரமைக்காவிட்டால் ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைப்போம், கிராமத்தினர் அறிவிப்பு
நரிக்குடி அருகே அம்மன்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை 12 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பழுதடைந்துள்ளது. சீரமைக்காவிட்டால் ஆதார் அட்டை, ரேஷன்கார்டை திரும்ப ஒப்படைப்போம் என்று அறிவித்துள்ளனர்.
காரியாபட்டி,
நரிக்குடி ஒன்றியம், இலுப்பையூரிலிருந்து அம்மன்பட்டி கிராமம் வரை செல்லும் சாலையில் உடையசேர்வைக்காரன் பட்டியிலிருந்து, அம்மன்பட்டி வரை செல்லும் சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. நடந்து செல்லக்கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தச் சாலையை செப்பனிடக் கோரி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று கிராமத்தினர் தெரிவித்தனர்.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அருகில் உள்ள இலுப்பையூரில் உள்ள மேல்நிலைபள்ளிக்கு செல்ல முடியாமல் 17 கிலோ மீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சென்று தான் படிக்கின்றனர். அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் கூட இந்த சாலையில் வர மறுக்கின்றனர்.
அம்மன்பட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவசர தேவைக்கு இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் கமுதி வழியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்கள் கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விருதுநகர் சென்று எங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story