பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் கலெக்டர் தகவல்


பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:15 AM IST (Updated: 26 Aug 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்ற விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2018-2019-ம் நிதியாண்டில் கரூர் மாவட்டத்தில் அரசு ஆணைப்படி 10 ஊராட்சிகளில் வருகிற அக் டோபர் மாதத்தில் பெண் களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரவக்குறிச்சி ஒன்றியம் கொடையூர், லிங்கமநாயக்கன்பட்டி, க.பரமத்தி ஒன்றியம் கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கடவூர் ஒன்றியம் கீழப்பகுதி, கரூர் ஒன்றியம் கொசூர், குளித்தலை ஒன்றியம் குமாரமங்கலம், தாந்தோணி ஒன்றியம் காக்காவாடி, தோகைமலை ஒன்றியம் கல்லை ஆகிய 10 ஊராட்சிகளில் நாளை (திங்கட்கிழமை) சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படும்.

கிராம அளவிலான தேர்வுக் குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 2-வது கிராமசபை கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி நடத்தப்பட்டு அதில் பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறப்படும். இறுதி பயனாளிகள் பட்டியல் மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, பெண்களின் வாழ் வாதாரத்தை முன்னேற்ற விலையில்லா ஆடுகள் வழங்கி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற, பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். பயனாளி களுக்கு விவசாய நிலம் இருத்தல் கூடாது, சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும், 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், தற்சமயம் கால்நடைகள் ஏதும் இருத்தல் கூடாது, குடும்ப உறுப்பினர்கள் எவரும் மத்திய மாநில அரசுப் பணியில் இருத்தல் கூடாது, வழங்கப்படவுள்ள ஆடுகள் 2 ஆண்டுகளுக்கு பராமரித்தல் வேண்டும் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.

குறைந்தபட்சம் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களாக தேர்வு செய்யப்படுவர். பொதுமக்கள் மேற்படி கிராமங்களில் நடைபெறும் கிராம சபையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story