வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் ஜெயக்குமார்-மதுசூதனன் ஆதரவாளர்கள் இடையே மோதல்
மீனவ கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது, அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும், அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மதுசூதனன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள காசிபுரம், புதுமனை குப்பம், பவர் குப்பம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கான மீனவ கூட்டுறவு சங்க இயக்குனர்கள் 7 பேரை தேர்ந்தெடுக் கும் மீனவ கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் காசிமேடு சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகிய இடங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்ய அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினரும், அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பினரும் மற்றும் அ.ம.மு.க. வினரும் வந்திருந்தனர்.
காசிமேடு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அ.தி.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினரும், அ.ம.மு.க.வினரும் திரண்டு இருந்தனர். ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்ய வெகு நேரமானது. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. இரு தரப்பினர் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் வேட்புமனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மதுசூதனன் ஆதரவாளர்கள் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த மீன்வளத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் காசிமேடு போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காசிமேடு உதவி கமிஷனர் தனவேல் வேட்புமனு தாக்கலை நிறுத்துவதாக நோட்டீஸ் ஒட்டினார். இதனால் வேட்புமனு தாக்கல் நிறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story