வெள்ளப்பெருக்கால் களையிழந்த பண்டிகை பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் ரத்து
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களையிழந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
பத்மநாபபுரம்,
கேரள மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ‘ஓணம்’ முக்கிய இடத்தை பெற்றுள்ளது. வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கியவுடனே ஓணம் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கி விடும். கேரள மக்கள் புத்தாடை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும், ஓண ஊஞ்சல் ஆடியும், படகு போட்டி நடத்தியும் கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது மழை வெள்ளம் வடிந்தாலும் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால், ஓணம் பண்டிகையான நேற்று கொண்டாட்டம் எதுவும் நடைபெறவில்லை.
கேரள அரசும் இந்த ஆண்டு விழாக்களை ரத்து செய்வதாக அறிவித்தது. கேரள மக்களும் ஓணம் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் அவர்களுக்குள் வாழ்த்துகள் தெரிவித்து கொண்டனர்.
கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட்டம் களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.
தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூக்கோலம், ஓண ஊஞ்சல் ஆட்டம் போன்றவை நடைபெறும். புலியாட்டம் செண்டை மேளம், புத்தாடை அணிந்து வரும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை பார்த்து ரசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் ஓணம் பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருவது வழக்கம்.
ஓணம் பண்டிகை தினமான நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் எதுவும் நடைபெறவில்லை. கேரள அரசு விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதனால் நேற்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நித்திரவிளை அருகே ஓணம் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இரயுமன்துறையில் இருந்து பருத்திக்கடவு வரை ஆற்றில் படகு போட்டி நடைபெறும். மேலும், இளைஞர்களுக்கு நீச்சல் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இதை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு படகு போட்டி உள்பட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
இதுபோல், குழித்துறையில் இளைஞர் மன்றத்தினர் மாவேலி வேடமணிந்து வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு வாழ்த்து கூறுவார்கள். அவர்களை வரவேற்க அந்த பகுதி மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், மலர் தூவியும் மகிழ்வார்கள். இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

Related Tags :
Next Story