பளுகல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு நண்பர் படுகாயம்
பளுகல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
களியக்காவிளை,
பளுகல் அருகே இலவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 46). தொழிலாளி. இவருடைய நண்பர் ராதாகிருஷ்ணன். சம்பவத்தன்று இருவரும் பளுகலில் இருந்து பாறசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜன் ஓட்டினார். பின்னால் ராதாகிருஷ்ணன் இருந்தார்.
பளுகல் அருகே உள்ள சாலையில் சென்ற போது அந்த பகுதியில் பள்ளம் இருந்துள்ளது. உடனே ராஜன் திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராதாகிருஷ்ணன் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பளுகல் போலீசார் விரைந்து வந்து ராஜனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story