துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மணக்குடியில் நடந்தது


துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மணக்குடியில் நடந்தது
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 26 Aug 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கோவளம் பகுதியில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலையில் மணக்குடியில் உள்ள ஆலயம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலகிருஷ்ணன்புதூர்,

கன்னியாகுமரி கோவளம் பகுதியில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலையில் மணக்குடியில் உள்ள ஆலயம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மணக்குடி பங்கு தந்தை கிளிட்டஸ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் கீழமணக்குடி பங்குதந்தை, தென்தாமரைகுளம் பங்குதந்தை மற்றும் பெண்கள், ஆண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story