‘எங்களுக்கு ஆட்சியை விட கட்சி தான் முக்கியம்’ - அமைச்சர் சி.வி.சண்முகம்


‘எங்களுக்கு ஆட்சியை விட கட்சி தான் முக்கியம்’ - அமைச்சர் சி.வி.சண்முகம்
x
தினத்தந்தி 26 Aug 2018 5:00 AM IST (Updated: 26 Aug 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

எங்களுக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம் என்று விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘பிளாஸ்டிக் மாசற்ற தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது என்றார்.

அதன் பின்னர், அ.தி.மு.க. செயற்குழுவில் ஆட்சியை விட கட்சிதான் முக்கியம் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்ட போது, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், தி.மு.க. போன்ற தீயசக்திகள் இந்த நாட்டை ஆளக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் இந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. எங்களுக்கு ஆட்சியை விட கட்சிதான் முக்கியம் என்றார்.




Next Story