மும்பை பல்கலைக்கழக செல்போன் செயலி அறிமுகம்
மாணவர்களின் வசதிக்காக மும்பை பல்கலைக்கழக செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் வசதிக்காக MUM E-Suvidha என்ற புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலி மூலம் மாணவர்கள் தேர்வு கால அட்டவணை, தேர்வு அறை விவரங்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர மாணவர்கள் இந்த செயலி மூலம் ஹால் டிக்கெட், தேர்வு விண்ணப்பம், மறுமதிப்பீடு உள்ளிட்ட விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை நிரந்தர பதிவு எண் வைத்துள்ள மும்பை பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த புதிய செயலி மாணவர்களுக்கு பல்வேறு விதங்களில் பயன் உள்ளதாக இருக்கும் என மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் சுகாஸ் பெட்னேக்கர் கூறினார்.
Related Tags :
Next Story