காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் சீரமைக்கப்படாத அவலம்
ஆண்டிப்பட்டி அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கண்டமனூர்,
இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலம் துண்டிக்கப்பட்டதால் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் விளையும் பொருட் களை தேனி சந்தைக்கு கொண்டு செல்ல இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதுதவிர பிரசித்தி பெற்ற மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு இந்த பாலம் வழியாக செல்ல வேண்டும்.
ஆனால் இந்த பாலம் துண்டிக்கப்பட்டதால் 30 கி.மீ தூரம் சுற்றி ஆண்டிப்பட்டி வழியாக செல்லும் நிலை உள்ளது. மேலும் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியில் இருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் பாலம் ஒன்று உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. அதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்த பாலத்தை சீரமைக்காததால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலம் துண்டிக்கப்பட்டதால் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் விளையும் பொருட் களை தேனி சந்தைக்கு கொண்டு செல்ல இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதுதவிர பிரசித்தி பெற்ற மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு இந்த பாலம் வழியாக செல்ல வேண்டும்.
ஆனால் இந்த பாலம் துண்டிக்கப்பட்டதால் 30 கி.மீ தூரம் சுற்றி ஆண்டிப்பட்டி வழியாக செல்லும் நிலை உள்ளது. மேலும் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story