மந்திரி சா.ரா.மகேஷ் பேசுவது சரியானது அல்ல - எடியூரப்பா பேட்டி
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக மந்திரி சா.ரா.மகேஷ் பேசுவது சரியானது அல்ல என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
குடகில் நேற்று முன்தினம் வெள்ள பாதிப்புகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் குடகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேசுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மந்திரி சா.ரா.மகேஷ், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகவும், பொறுப்பின்றி பேசுவதாகவும், தேர்தலில் போட்டியிடாமல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பின ராகி உள்ள அவருக்கு மற்ற கஷ்டங்கள் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், குடகில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளார். குடகில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி பிரதமரிடம் அவர் அறிக்கை அளித்துள்ளார். ஆனால் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக மந்திரி சா.ரா.மகேஷ் பேசி இருப்பது சரியானது அல்ல. நிர்மலா சீதாராமன் மட்டும் இன்றி நாட்டில் உள்ள அனைத்து ராஜ்யசபா எம்.பி.க்களையும் மந்திரி சா.ரா.மகேஷ் அவமானப்படுத்தி விட்டார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதலில் சா.ரா.மகேஷ் எப்படி மந்திரியானார் என்பது தெரிந்து பேச வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தான் பா.ஜனதாவும் வலியுறுத்தியது. கந்து வட்டியை ஒழிக்கவும், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளுக்கு செல்போன் வங்கி சேவை (மோபைல் பேங்கிங்) திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story