வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 27 Aug 2018 4:45 AM IST (Updated: 26 Aug 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு மனு செய்துள்ளார். அவர் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. வளர்ச்சிக்கு பணியாற்றியதோடு, அரசு பணிகளிலும் பணியாற்றி உள்ளார். அது தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


பா.ஜ.க. என்றைக்கும் நடிகர்களின் பின்னால் சென்றதில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்ன?. அதாவது கர்நாடகத்திடம் இருந்து முறைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தருவது. அதனை சேமித்து வைப்பதா? கடலில் கலக்க விடுவதா, அதனை பாசனத்துக்கு கொண்டு சேர்ப்பதா? என்பது தமிழக அரசின் வேலை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் வலுவான கூட்டணி, முதல்நிலை கூட்டணியாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story